பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு!

0
259

தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் தொடங்கியது.ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி.பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது.விரைவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here