இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, 3 நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவர் சிங்கப்பூர் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார். பிராந்திய புவிஅரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான, நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவை இருவரும் உறுதிப்படுத்தினர்.