உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. முன்னுரிமைமத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சில ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த, 2020 ஆக.,ல் முதல் முறையாக, 101 ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்தாண்டு மே மாதத்தில், 108 ஆயுதங்களுக்கு தடை விதித்து இரண்டாவது பட்டியல் வெளியிடப் பட்டது.இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, 101 ஆயுதங்கள், தளவாடங்களுக்கான தடை பட்டியலை, பா.ஜ., மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.