லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை சமாளிக்க, நமது ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியை கற்று கொடுக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக, ராணுவ தளபதி நரவானேயிடம் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மூலமும், பல்கலை மற்றும் பயிற்சி நிலையங்கள் மூலம் வீரர்களுக்கு சீன மொழியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், பாகிஸ்தான், வருங்காலத்தில் சீனாவும் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம்..மொழி, கலாசாரம், அரசியல் மற்றும் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் சீனா குறித்த நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்தை கையாளும் ராணுவ அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்கின்றனர். பின்னர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பணியாற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் நிபுணத்துவம் பெறும் வகையில், தொடர்ச்சியாக மற்றும் நீண்ட பணிக்காலம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.