மத்திய நிதி மந்திரி அமெரிக்கா பயணம்- பன்னாட்டு நிதிய கூட்டத்தில் பங்கேற்கிறார்

0
168

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பன்னாட்டு நிதியம் மற்றும், உலக வங்கியின் உயர்நிலை கூட்டங்கள், ஜி-20 உறுப்பு நாடுகளின் நிதி மந்திரிகள் மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.
இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிதியமைச்சர் பங்கேற்கிறார். இந்திய அரசிற்கு முன்னுரிமை அளிக்கும் எரிசக்தி உட்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here