புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்றே்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) மையம் சென்றடைகிறார். இரவு அங்கு அமித்ஷா தங்குகிறார். நாளை (ஏப்.24- காலை 8.35 மணிக்கு ஆவடி சி.ஆர்.பி.எப். மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு புதுச்சேரி செல்கிறார்.