திருச்சி வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா…!

0
181

 

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர் வரத்து குறைந்து பாசனத்திற்கு திருப்பி விடப்பட்டதால், ஏரிக்கு வரும் நீர் தடைபட்டது. ஏரி வறண்டு போகும் நிலையில் இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மீன்பிடி திருவிழா ஊராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு மீன்பிடி திருவிழா துவக்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here