சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க தற்காலிக தடை: இந்தியா அதிரடி

0
151

சீனாவை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு, சீனா பல்கலை.,களில் படித்த 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். திரும்பி செல்வதற்கு சீனா அனுமதி கொடுக்காததால், மாணவர்களால் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கோரிக்கை விடுத்தும், சீனா காலம் தாழ்த்தி வருகிறது.

சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் சுற்றுலா விசா இனி செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here