ஏமனில் சிக்கிய ஏழு இந்தியர் மீட்பு

0
213

மேற்காசிய நாடான ஏமனில் கடல் வழியே சென்று கொண்டிருந்த, ஐக்கிய அரபு எமிரேட்சின் சரக்கு கப்பலை, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறைபிடித்தனர்.
இக்கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஏழு பேர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 14 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.அவர்களை மீட்க, ஓமன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பலனாக, ஏழு இந்தியர்கள் உட்பட 14 பேரும் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட அனைவரும் ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு விமானம் வாயிலாக அழைத்து வரப்பட்டனர்.இந்த விவகாரத்தில் உதவிய ஓமன் அரசுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here