வக்பு வாரிய சொத்தா திருச்செந்துறை கிராமம் ?

0
225

திருச்சி மாவட்டம் முள்ளிகரும்பூரை சேர்ந்தவர் ராஜகோபால். இவர், அந் தநல்லுார் ஒன்றியம் திருச்செந்துறை கிராமத்தில் உள்ள தனது நிலத்தை விற்பதற்காக பத்திரப்பதிவுக்கு ஏற்பாடு செய்தார்.

திருச்சி 3வது இணை பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு சென்ற ராஜகோபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பத்திர பதிவுக்கு குறிப்பிடப் பட்டிருந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனவே, பத்திரப்  பதிவு செய்ய முடியாது என திருப்பியனுப்பினர்.

இதுகுறித்து ராஜகோபாலும், பத்திர எழுத்தரும் இணை பதிவாளர் அலுவ லகத்தில் விசாரித்த போது சரிவர தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து விபரமறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது, கடந்த மாதம் 18ம் தேதி வக்பு வாரிய அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுமார் 250 பக்கத்துக்கும் மேல் கொண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில் ஆயிரக் கணக்கான சர்வே எண்களை. குறிப்பிட்டு அவை வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள். அவற்றை பத்திர பதிவு செய்ய கூடாது என கூறப்பட்டுள்ளது.

அந்தநல்லுார் ஒன்றியத் துக்குட்பட்ட திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என அந்த கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தது. இக்கிராமத்தில்உள்ள நிலத்தை ராஜகோபல் விற்பதற்காக பத்திர பதிவுக்கு சென்ற போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.வில்லங்க சான்றில் ராஜகோபல் பெயர் இடம்பெற்றுள்ளது. வருவாய்த்துறையின் ஏ பதிவேட்டிலும் ராஜகோபால் பெயர்  இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் வக்பு வாரிய கடிதத்தை சுட்டிகாட்டி பத்திரம் பதிய மறுக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கிரமத்தில் உள்ள கோவிலின் வரலாறு :-

பல நூற்றாண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் பாட்டனார் பராந்தக சோழன் திருச்சி உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ வள நாட்டை ஆண்டு வந்தார். காவிரியின் இருகரைகளிலும் (வடகரை, தென்கரை) காடுகளாக இருந்தன. பௌர்ணமிக்கு தினங்களுக்கு முன் அந்திப் பொழுதில் அமைச்சர்கள், படைவீரர்கள் படை சூழ காடுகளில் திருடர்களைப் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்த இடத்தில் பலா மரக்காடாக இருந்தது. அவர்கள் வந்த சமயத்தில் திருடர்கள் அங்கு இல்லை. ஆனால் மான்கள் கூட்டமாகத் தங்கியிருந்தன. பொழுது போக்காக மன்னர்கள் வேட்டையாடுவது வழக்கம். அவ்வாறு மான்களை வேட்டையாடும் போது அவை சிதறி ஓடும் போது, ஒரு பெரிய பலா மரப்பொந்தில் ஒரு மான் ஓடி ஒளிந்தது. மான் மீது எய்த ஒரு அம்பு குறி தவறிப் பலா மரத்தில் பட்டு, அந்த இடத்தில் பலாமரப் பாலுக்குப் பதில் செந்தண்ணீராகக் கசிந்தது.

அப்போது மேலே ஓர் அசரீரி (தேவகுரல்) ஒலித்தது. சிவபெருமான் சுயம்பு ரூபமாக அந்த மரத்தின் அடியில் உள்ளதாகவும், அங்கே ஒரு சிவாலயம் அமைக்குமாறு முதலாம் பராந்தகச் சோழனுக்குக் கட்டளையிட்டது. மானானது மாயமானது. வில் அம்பைக் கீழே போட்டுவிட்டுச் சிவபெருமான் இருக்குமிடத்தில் உயிர்வதை செய்ய வந்து விட்டோமே என்று நினைத்து விழுந்து வணங்கிவிட்டு அரண்மனை சென்று செப்புத் தகட்டில் இந்நிகழ்வைப் பதிவு செய்தனர். அரண்மனையிலிருந்து 13 கல் தொலைவில் மேற்கே திருச்சி கரூர் புற வழிச்சாலையில் சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற பதிவுத்தகடு இன்றும் மக்கள் பார்வைக்குத் தஞ்சை சரஸ்வதி மஹாலில் அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னன் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவனைக் கண்ணால் பார்க்கும் பெரும்பேறோ, சிவாலயம் அமைக்கும் பாக்கியமோ அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் ஆண்ட பகுதியில் மலைகள் இல்லாத காரணத்தினால் கற்கோயில் எழுப்பச் செய்ய முடியவில்லை.

அவருக்கு பின் வந்த  குந்தவை நாச்சியாரின் பெருமுயற்சியால் வெளியே அமைச்சர்களை அனுப்பி மேற்குத் திசையில் முசிறி, தொட்டியம், நாமக்கல் பகுதியிலுள்ள மலைகளிலிருந்து அந்தப் பகுதியை ஆண்டு வந்த சாளுக்கிய மன்னனிடம் அனுமதி பெற்று அங்குள்ள சிறைக்கைதிகளையும் வைத்து கருங்கல் பாறைகளைப் பெயர்த்து யானைகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டது.

617 தினங்களில் சிவனுக்கும் சக்திக்கும் ஆலயங்கள் அமைத்து குடமுழுக்கு நடத்தி சுமார் 400 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் எழுதி வைத்ததாக கோயில் சுவர் கல்வெட்டுகளில் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருஞானசம்பந்தரால் அன்புடன் தொழப்பெற்று, பத்துப் பாடல்கள் இயற்றி, நமக்கு இரண்டு பாடல்கள் மட்டும் தான் கிடைத்துள்ளன. எட்டு பாடல்கள் ஓலைச்சுவடிகளைக் கரையான் அரித்து விட்டதால் கிடைக்கவில்லை.

தொழுது புறம் பனைய என்று துவங்கும் பாடலும், மாதேந்துபதம் மானை வைத்தான் என்ற பாடலும் இங்குள்ள சிவனையும், சக்தியையும் குறிப்பிடுகின்றன.

தொழுது புறம்பணைந்து அங்கு நின்றேகிச்சுரர் பணிவுற்று எழுதிரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்தணைவார் செழு மலர்ச் சோலைத் திருக்கற்குடி மலைசேர வந்தார்.

 -சேக்கிழார்,பெரியபுராணம் (6-1-3-4-2)

திருஞானசம்பந்தர் பாடிய வைப்புத் தலமாக இத்தலம் உள்ளது. அன்பின் மிகுதியால் சம்பந்தர் பலாசவனத்தானே என்ற பெயரில் அழைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here