இந்துமுன்னணி நிறுவனர்- வீரத்துறவி இராமகோபாலன் அவர்களின் நினைவுதினம் இன்று (30-09-2020).
அவரைப் பற்றிய சில தகவல்கள்…
பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம் அவர் வீட்டில் பகத்சிங் தன் தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்குக் காணிக்கை செலுத்துவது போன்ற ஓவியம் –அர்த்தம் கேட்க – நாட்டுக்காக தேவைப் பட்டால் உயிரையும் தரலாம் என தந்தை கூறிய விளக்கம் சிறுவன் இராம.கோபாலனின் அடி மனதில் ஆழப்பதிந்துவிட்டது .
இராம.கோபாலன் படிப்பிலும் சிறந்தவர். சீர்காழியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு , கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார். டிப்ளமோ முடித்து ஏ.எம்.ஐ.ஈ.ச. சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போது, 1945 – ல் ஆர்.எஸ்.எஸ் – ல் சேர்ந்தார் .
சுதந்திரத்திற்கு பின்,ஏற்பட்ட தேசப்பிரிவினையால், சொந்த நாட்டிலேயே இந்துக்கள் அகதிகளாக வாழ வேண்டியுள்ளதே என்று கொதித்தார். இந்துக்கள் பலஹீனமாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என உணர்ந்து தனது வேலையை உதறி, முழுநேர ஆர்.எஸ்.எஸ் . தொண்டரானார்.
இவர் சிறந்த கவிஞர், இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மேடைகளில் தேசபக்திப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.
தென்மாவட்டங்களில் பரவலாக நடந்த மதமாற்றங்களை தடுப்பதற்காக, 1980 ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டுதலால் இராம . கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி. இதன் முதல் தலைவர் ப.தாணுலிங்க நாடார்.
தனது வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்களை இதற்காக உருவாக்கினார். தமிழ் இலக்கியங்களில் உள்ள தேசியத் தன்மையை ஹிந்து தன்மையை தமிழ் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் .
மீனாட்சிபுரம் மதமாற்றம் துவங்கி பல மத மாற்றங்களை தடுத்தவர். பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர். ஒவ்வொரு சாதாரண இந்துவையும் ஹிந்து சமுதாயத்திற்காக போராட வைத்தவர்.
பெண்களை ஒருங்கிணைத்து இந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
தமிழகத்திலுள்ள இந்துக்களும், இந்து முன்னணியினரும் இராம.கோபாலனை “ வீரத்துறவி” என்றுதான் பாசத்தோடு அழைப்பார்கள். அதற்கு அவர் தகுதியானவர்தான்.