கல்வி நிலையங்கள் சமுதாய விழிப்புணர்வு கேந்திரமாக பரிணமிக்க வேண்டும் -ஸ்ரீ கோவிந்த மகந்ஜி

0
332

ஜலந்தர்:அகில பாரத கல்வி அமைப்பான வித்யா பாரதியின் செயற்குழு கூட்டம் 15 முதல் 17 செப்டம்பர் வரை வித்யா தாம் ஜலந்தரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அகில பாரத அமைப்புச் செயலர் ஸ்ரீ கோவிந்த மகந்த்ஜி துவக்கி வைத்து உரையாற்றும் போது வித்யாபாரதியின் கல்விக் கூடங்கள் முன்மாதிரியான கல்வி நிலையங்களாக மாறுவதுடன்  கல்வியின் மூலம் சிறந்த குணங்கள் வளர்க்கவும் சமுதாய விழிப்புணர்வு கேந்திரங்களாகவும்  பரிணமிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமாக பேசும் போது தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் வித்யா பாரதியின் பங்களிப்பு  முக்கியமானது. கடந்த  இரு வருடங்களாக இதற்காக  நாம் முயற்சி செய்து வருகிறோம் என்றார். ப்ராந்த  மற்றும் க்ஷேத்திர எண்ணிக்கைகள் பற்றி விவாதிக்கும் போது பொதுச் செயலர் ஸ்ரீ அவனிஷ் பட்நாகர் கொரோனாவுக்கு முன்பும் பின்பும் மாணவருடைய எண்ணிக்கையில் பெரு மாற்றம் வந்திருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு நாம் வளர்ந்துள்ளோம். சில பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பின் அது சம்பந்தமாக யோசனை செய்து நாம் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முற்பட வேண்டும் என்றார்.

மத்திய அரசிடம் இருந்து பாரதீய மொழி குழுவின் மூலம் கிடைக்கப்பெற்ற அறிக்கையை அளித்து பேசும் போது ஆங்கில மொழியின் மோகத்தை அகற்றி பாரதீய மொழிகளுக்கு உரிய கௌரவத்தை அளிப்பதும் பாரத மொழிகளை பாதுகாப்பதும் வளர்ச்சி அடைய செய்வதும் நம் எல்லோருடைய வேலையாக இருக்கிறது.  ஆங்கில அரசாங்கம் பாரதத்தின் கல்விக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மெக்காலே கல்வித் திட்டம் சிபாரிசு செய்ததுடன்  வரும் 2035இல் ஏறத்தாழ 200 ஆண்டுகள் பூர்த்தி அடையப் போகின்றன. பாரத நாட்டுக்கு ஒவ்வாத கல்வி முறையை நாம் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

அகில பாரதிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ காசிபதி பாரதத்தின் இயற்கை அமைப்பு குறித்து விரிவாக சர்ச்சை செய்து பேசினார்.  எல்லைகள்,  நதிக்கரைகள்,  சேவா மையங்கள்,  வளர்ப்பு மையங்கள், மற்றும் கிராமங்களில் விரிவாக இப்பணியை எப்படி செய்வது என்பது குறித்து நாம் சிந்தனை செய்ய வேண்டும்.

நிறைவு நிகழ்ச்சியில் அகில பாரத தலைவர் ஸ்ரீ டி ராமகிருஷ்ண ராவ் பேசுகையில் கல்விக்கூடங்களில் உள்கட்டமைப்பு நன்றாக இருப்பதுடன் ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள   முயற்சி செய்ய வேண்டும் என்றார்.  தேசிய கல்விக் கொள்கை நமது பள்ளிகளில் அமுல் செய்வதுடன் சமுதாய தலைமைக்கு உகந்ததாக மாற வேண்டும். இது சம்பந்தமாக அனைவரும் முழு முயற்சியுடன் வேலை செய்ய வேண்டும்.

இந்த அகில பாரத பைட்டக்கில்  பல்வேறு விஷயங்கள் குறித்து யோசிக்கப்பட்டன.  நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன புரட்சி பாதையாளரும் மக்கள் போற்றும் வீரர்-  ஆச்சார்ய பிரம்மகுப்தர், ஞானத்தின் விஷயங்கள் பாகம் 2 – ஆச்சரிய பிரபுல்ல சந்திரராய  முதலிய ன. 16 செப்டம்பர் இரவன்று பஞ்சாபின் பிரசித்தமான நாட்டுப்புற பாடல் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன்,  சிசுவாட்டி காவின்  கண்காட்சிகளும் அமைந்தன.  இது அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது.  நாடு முழுவதிலிருந்தும்  179 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here