தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகளை துவக்கினார் அமைச்சர்

0
195

புதுடில்லி,அடிப்படை கல்வி பயிலும், 3 – 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணியை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று துவக்கி வைத்தார்.

கடந்த 2020ல் வகுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 2022ம் ஆண்டுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்வி, ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர்கள் பயிற்சி கல்வி, பெரியவர்களுக்கான கல்வி என, நான்கு பாடத்திட்ட கட்டமைப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 3 – 8 வயது வரையிலான குழந்தைகளின் பாடத்திட்ட கட்டமைப்பு பணிகளை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2020ல் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்துவதில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகையில் பாடத் திட்டங்களை வகுப்பது, பாடப் புத்தகங்களை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், அடுத்த சரஸ்வதி பூஜைக்குள் முடித்துவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here