வீர பால திவஸ்
வீர பாலகர் தினம்
பால ஸ்வயம்சேவகர்களின் பத சஞ்சலன்
3.5 முதல் 14 வயது வரை உள்ள 9,000 பால ஸ்வயம்சேவகர்கள் பூர்ண கணவேஷிலும், 3,000 பாலகர்கள் சாதாரண உடையிலும் இந்த சஞ்சலனில் பங்கேற்றனர்.
கொரோனா காரணமாக தடைபட்டு இருந்த நிகழ்ச்சி 3 வருடங்களுக்குப் பிறகு இன்று சிறப்பாக நடைபெற்றது.
குரு கோவிந்த சிங் ஹிந்து தர்மம், ஹிந்துக்களைக் காத்திட தன்னுயிர் தந்தது மட்டுமல்ல அவருடைய தந்தை குரு தேஹ்பகதூரும் காஷ்மீர் ஹிந்துக்களை யும், ஹிந்து தர்மம் காத்திடவும் தன் தலையைக் கொடுத்தவர்.
குரு கோவிந்த சிங் தன் 4 புதல்வர்களை யும் இழந்தார். 2 புதல்வர்கள் போரில் வீர மரண மடைந்தனர். அடுத்த 2 புதல்வர்கள் சிறு பாலகர்களாக இருக்கையில் உயிரு டன் கல்லறை கட்டப்பட்டு உயிர்த் தியாகம் செய்தவர்கள்.
அவர்களின் நினைவைப் போற்றிடும் வகையில் டிசம்பர் 26 பால பலிதான் திவஸ் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனையொட்டி தில்லியின் எல்லையில் இருக்கும் காஸியாபாத் நோய்டா விரிவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பால ஸ்வயம்சேவகர்களின் பதசஞ்சலன் நடைபெற்றது.