கிருஷ்ண தேவராயர் 

0
260

பதிமூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் படையெடுப்பு எனும் பெயரில் வரிசையாகப் பல கொள்ளைகள் நிகழ்த்தி – பொதுமக்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி – சமுதாயத்தின் ஆணிவேர்களாக விளங்கிய திருக்கோயில்களையும் பண்பாடுகளையும் கடுமையாகத் தாக்கிச் சீர்குலைத்த வடக்கத்திய இஸ்லாமியப் படையெடுப்பாளர்களின் ஆதிக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து தென்னகத்துக் கோயில்களும் கலைகளும் முற்றிலுமாக அழிந்து போகாமல் காப்பாற்றி ஒரளவிற்கு மீட்டெடுத்த பெருமை உரியது.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயரது காலத்தில்தான் விஜயநகரம் தனது உச்சக்கட்ட பலத்தை எய்தியது.
தென்னகம் முழுவதிலும் பல திருக்கோயில்களுக்குப் பலப்பல நிவந்தங்களை இராயர் அள்ளியள்ளி அளித்திருக்கிறார். சிதம்பரம், திருவரங்கம், திருமலை என்று நீளும் இப்பட்டியல் மிக நீளமானது.
கலை – இலக்கியத்திலும் லேசுப்பட்டவரல்ல. ஹம்பி மாநகர எச்சங்கள் இவரது கலையார்வத்திற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு.
ஆண்டாளின் பக்தி வரலாறு இவருக்கு மிகவும் பிடித்துப்போக, ஆமுக்த மால்யதா என்றொரு காவியமே அவள் பேரில் இயற்றிவிட்டார். இந்தக் காவியத்தின் பின்னணியில்தான் இன்றும் ஆந்திர மக்கள் ஆண்டாளைக் கோதாதேவி என்று பெயரிட்டுக் கொண்டாடி வருகின்றனர். ஆண்டாளின் திருவுருவம் இல்லாத வைணவக் கோயில்கள் தமிழ்நாட்டில் பல உண்டு. ஆந்திரத்தில் கிடையாது.
விஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்தன. போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
கிருஷ்ணதேவராயர் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார்.
தென்னிந்தியாவில் பெரும்பாலான கோயில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் எனற புதிய நகரை நிர்மாணித்தார். மேலும் ஏராளமான ராயகோபுரங்களையும் அவர் கட்டுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here