இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா. நானா சாகிப்பின் நெருங்கிய நண்பர்.
முதல் இந்திய விடுதலைப் போரில் தளபதி மற்றும் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர். மேலும் கட்டளை அதிகாரி என்று பொருள்படும் தோபே என்ற பட்டத்தைப் பெற்றார். தோபே என்றால் தலைவர் என்று பொருள்படும். பிதூரின் நானா சாகிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார், அவருடன் குவாலியர் நகரத்தையும் கைப்பற்றினார்.
ஜான்சி ராணிக்கு பெரிதும் துணை இருந்தவர். 1857 இல் இருந்து 1859 வரை பல இந்திய மன்னர்களுடன் சேர்ந்து பல இடங்களில் போராடியவர்.
ஜெனரல் நேப்பியரின் பிரிட்டிஷ் இந்திய துருப்புக்கள் ரனோத் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டனர். மேலும் சிகாரில் மேலும் தோல்வியடைந்த பின்னர் முற்றுகையை கைவிட்டார்.
ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்ட இவருக்கு இராணுவ நீதி மன்றம் 1859 ஏப்ரல் 15 இல் தூக்கு தண்டனை விதித்தது. தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் தாம் தமது மன்னரின் ஆணையின்படி செயல்பட்டதாகவும் கூறி, சங்கிலியால் கை, கால்கள் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலும் தூக்குக் கயிற்றைத் தாமே கழுத்தில் மாட்டிக் கொண்டார். 1859 ஏப்ரல் 18 அன்று தளபதி தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டார்.