அமெரிக்கா ஐ.நா., தலைமையகத்தில் நேரலை |பிரதமர் மோடியின் 100 – மனதின் குரல்

0
208

பிரதமர் நரேந்திர மோடியின், ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியை கவுரவப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்கள் சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.’பிரதமர் மோடியின் மிக முக்கியமான இந்த வானொலி பேச்சு, சிறப்பான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் பயனுள்ள தகவல்தொடர்பு வழிமுறையாக மாறியுள்ளது’ என, அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம், அமெரிக்காவில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேரலையில் நேற்று ஒலிபரப்பானது. இந்த தகவலை, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் ருச்சிரா கம்போஜ் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here