டென்சிங்

0
93

இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இமயத்தை இந்துக்கள் கடவுளின் வீடு என்று வழிபடுகிறார்கள்.

பல வருடமாக உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை அடைவது மிக பெரிய சவாலாக இருந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்கள் இந்த சவாலை சந்திப்பதற்காக முயன்று கொண்டிருந்தனர்.

1953 ஆண்டு மே மாதம் 29 தேதி டார்ஜலிங்கை சேர்ந்த டென்சிங் நார்கேயும், எட்மண்ட் ஹிலாரி என்று நியூசிலாந்து வீரரும் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.

இன்று வரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்டின் உச்சியை 1200க்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள்.

எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக நானூறு பேருக்கும் அதிகமானோர் உதவியிருக்கிறார்கள். மலையேற்ற குழுவிலே நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். மலையின் ஒவ்வொரு தளத்திலும் கேம்ப் அமைக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு சமைக்கவும், சுமைகளை துக்கி வரவும் மருத்துவம் செய்யவும் வழிகாட்டுவதும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் துணை வருவார்கள்.

ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்கு குறைந்த பட்சம் ஆகும் செலவு 75000 டாலர். இந்திய மதிப்பில் நாற்பது லட்ச ரூபாய். பணமிருந்தால் மட்டும் மலையேறிவிட முடியாது. இதற்காக நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காக காத்திருப்பவரிகள் பட்டியலே இரண்டாயிரத்திற்கும் மேலாக உள்ளது
இவ்வளவு சிரமங்களை தாண்டி மலையேறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த
டென்சிங், சிறுவயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பதின்வயதில் இவர் திருட்டுதனமாக மலையேறத் துவங்கினார். அத்தோடு பிரிட்டீஷ் மலையேற்ற குழுவோடு கூலியாக வேலை செய்து கொண்டு இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு ஏறியிருக்கிறார்.

ஷெர்பா எனும் பழங்குடியின மக்கள் மிகுந்த தைரியசாலிகள் மற்றும் அசராத உழைப்பாளிகள். ஆகவே டென்சிங்கும் பயமற்றவராக இருந்தார்.

தனது சுய முயற்சியால் மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங், ஹிலாரியுடன் இணைந்து 1953 ஆண்டு எவரெஸ்ட் பயணத்தை மேற்கொண்டார்.

மலையேற்றத்திற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே போதாது கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவைப்படும். உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்து விடுவதோடு மிகப்பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்ககூடியது. அது போன்ற நிமிசங்களில் தான் தனியே மலையேறவில்லை என்றும் தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாக குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here