உலகளவில் எண்ணெய் நுகர்வில், முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. எண்ணெய் தேவை அதிகரிப்பால், 2027ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளின் எண்ணெய் தேவை மற்றும் நுகர்வு குறித்த ஆய்வை, இவ்வமைப்பு அண்மையில் மேற்கொண்டது. நடப்பாண்டில் உலகளாவிய எண்ணெய் தேவையின் வளர்ச்சியில், 60 சதவீதத்தை சீனா கொண்டிருக்கும். பின்னர், தொழில் வளர்ச்சி குறைவு மற்றும் உள்நாட்டு நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால், சீனாவின் தேவை சரிய வாய்ப்புள்ளது. மறுபுறம், இந்தியாவின் தேவை சீராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home Breaking News இந்தியா 2027-ல் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு...