தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கை தான் நேதாஜிக்கு இருந்தது. – டாக்டர் மோகன் பகவத்ஜி

0
120

கொல்கத்தா

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸர்ஸங்கசாலக் டாக்டர் மோகன் பகவத்ஜி மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாவில் ஸ்வயம்சேவகர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும் பொழுது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிந்தனையும் சங்கத்தின் சிந்தனையும் ஒன்றாக இருக்கிறது என்றார்.

சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் லட்சியமும், சிந்தனையும் நமது சங்கத்தின் சிந்தனையும் ஒன்றாக இருக்கிறது. அவர் காட்டிய வழியை நாம் எப்படி பின்பற்றுகிறோம் என்பதற்கு உதாரணமாக எல்லோரையும் இணைத்து யாரிடமும் பிரச்சனைகளின்றி வலுவாக, முதன்மையோடு சுயநல எண்ணமின்றி உடல், மனம், பொருள், ஆகியவற்றால் முழுமையடைய வேலை செய்ய வேண்டும். சுபாஷ்ஜி அவர்கள் எந்த ஒரு வேலையும் அரைகுறையாக செய்யும் எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் இந்த வேலை ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கன்றி வேலை முழுமை அடையும் வரை நாம் அதனை விட்டு விட முடியாது என ஸர்சங்கசாலக் கூறினார்.

சுபாஷ் சந்திர போஸ் தற்கால பாரத சிற்பிகளில் ஒருவர். பாரத மக்கள் தங்களின் தியாகம் ,பலிதானம் ஆகியவற்றின் காரணத்தினால் தான் சுதந்திரத்தை அடைந்திருக்கின்றனர். நாம் சில வேலைகளில் நம்முடைய சுயநலத்தை தவிர வேறு ஒன்றும் பார்ப்பதில்லை. நேதாஜி நாட்டுக்காக அனைத்தையும் சமர்ப்பணம் செய்திருந்தார். தேசத்தை தவிர வேறு ஒன்றும் அவர் யோசனை செய்யவில்லை நாமும் கூட அந்த லட்சியத்தோடு முன்னேற வேண்டும்.
நேதாஜி சிறந்த ஒரு வழிகாட்டியாக இருந்தார். ஆனால் தேசத்திற்காக அனைத்தையும் துறந்தார் அவருக்கு மகாத்மா காந்திஜியோடு கருத்து வேறுபாடு இருந்தது. தேர்தல் மூலமாக அவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்க உயர்ந்த உள்ளத்தோடு ராஜினாமா செய்திருந்தார். அதன் பிறகு மீண்டும் அவர் அடிமட்டத்திலிருந்து வேலையும் ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகத்தின் பல தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் விளைவாக அவர் நம் நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு செல்ல வேண்டியிருந்தது. பின்னர் ஜப்பான் வந்து ராஷ் பிகாரி போஸ் அவர்களுடன் சேர்ந்து ஆசாத் ஹிந்து சர்க்காரை உருவாக்கினார். அப்பொழுதுதான் தேசத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கை தான் நேதாஜிக்கு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here