தேர்தல ஆணையர்களைத் நியமனம் செய்திட இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
190

வெட்டித்தனமான வழக்குகளைப் போடும் பிரபல வழக்குரைஞர் ப்ரசாந்த் பூஷனின் Association for Democratic Reforms எனும் லெட்டர் பேடு அமைப்பின் பெயரில் வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் ஆணையத்தின் ஆணையர் ஒருவர் பணி நிறைவு பெற உள்ளார். அதனால் ஏற்படும் இடத்தில் புதிதாக ஒருவரைத் தேர்வு செய்திட வேண்டும். இதைக் காரணமாகக் கொண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தை தடை செய்ய வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா வழக்கை பட்டியலில் சேர்த்துக் கொள்வதாகவும், ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
அதற்குள் புதிய நபர் நியமிக்கப்பட்டு தேர்தலும் முடிந்துவிடும் எனவே உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வாதாடிய ப்ரசாந்த் பூஷனின் கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்று கூறி விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here