திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியை இதற்கு திருப்பி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பஞ்சப்பூரில் உள்ள 500 ஏக்கர் நிலத்தில் இதில் 325 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். ஆரம்ப திட்ட ஒதுக்கீடாக ருபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.