மூத்த ஸ்வயம் சேவக்கும் ஜம்முகாஷ்மீர் பிராந்த சங்கசாலக்குமான ஒய்வு பெற்ற பிரிகேடியர் சுசேத் சிங் காலமானார். வெகு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 80. அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றபின் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து தேசத்திற்காக பணியாற்றினார். 2008 ல் நடைபெற்ற அமர்நாத் இயக்கத்திற்காக தேசியவாதிகளுடன் இணைந்து போராடினார்.
பிரிகேடியர் சுசேத் சிங்கின் மறைவுக்குமத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், ஜம்மு காஷ்மீர் ஆர்எஸ்எஸ் பிராந்த பிரசாரக், ரூபேஷ்ஜி, பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ராய்னா கட்சியின் பொது செயலாளர் அசோக் கவுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.