பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை:பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

0
508

தமிழகத்தில் கொரோனா ஓரளவு குறைந்துள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here