மணிப்பூர் மாநிலத்தில், 52 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு பா.ஜ., அரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கோவாவில், 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு மூன்றாவது முறையாக பா.ஜ., அரசை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
உ.பி.யை பொறுத்த வரை, 25 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள். இதில், 20 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அங்கும் பா.ஜ.,வுக்கு அமோக ஆதரவு அளித்து தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்துள்ளனர். அதே நிலைதான் உத்திரகாண்டிலும் நடந்துள்ளது. பா,ஜ.வை மதவாத கட்சி என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம், பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.