மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மஹாபாரதம் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளனர்.மஹாத்மா காந்தியின் தாய், ராமாயணம், மஹாபாரதம் பெருமையை போதித்துள்ளார். பின், அவர் வளர்ந்த பின், ‘ராஜா ஹரிசந்திரா’ நாடகம் அவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இல்லாத பண்டைய இந்தியாவில், ஒரு நல்ல கலாசார சமுதாயத்தை உருவாக்க, இந்த புத்தகங்களில் உள்ள போதனைகளே காரணம். எனவே, ஹிந்து சமய நுால்களிலுள்ள ஒழுக்கங்கள் குறித்து மாணவர்கள் போதிப்பதால், இந்திய கலாச்சாரத்தை அறிவர்.
கர்நாடகாவிலும் பாடப்புத்தகத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.