ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால், காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் தில்லி திரும்பினா். அங்கு ஏறத்தாழ 11 மாத காலம் இந்திய தூதரகம் செயல்படாத நிலையில், தற்போது இந்திய தொழில்நுட்பக் குழுவினா் காபூல் சென்றுள்ளனா். இதன்மூலம் அங்கு இந்திய தூதரம் வியாழக்கிழமை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது, ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில்நுட்பக் குழு காபூல் சென்றடைந்தது. அண்மையில் மற்றொரு குழு ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் மூத்த தலைவா்களை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் உடனான நமது நீண்ட நெடிய உறவும், மனிதாபிமான உதவிகளும் தொடரும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.