என்னவென்றால் துருக்கி சுதந்திரம் அடைந்த பின்னர் நவீன துருக்கியின் தலைவரான கமல் பாஷா சில விஷயங்கள் பற்றி கம்பீரமாக உணர்ந்திருந்தார். அதில் ஒன்று மொழி சம்பந்தப்பட்டது. கமல் பாஷாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்ட பிறகும் கூட நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் இருந்து வெளிநாட்டு மொழியை அகற்றி துருக்கிய மொழியை கட்டாயமாக்கினார். ஏனெனில் அவர் துருக்கி மக்களுக்கு தேசிய எண்ணம் ஏற்பட வேண்டும் என்று விரும்பி இருந்தார். இதற்கு மொழி என்பது அவசியமாகும். அந்த காலத்தில் துருக்கி மொழி அரபு எழுத்து வடிவில் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு லத்தீன் மொழி எழுத்து வடிவம் தெரியாதோ அவர்கள் அரசாங்க வேலையில் இருந்து புறக்கணிக்கப்படுவார்கள் என ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதுபோன்று உலகம் முழுதும் முழுவதும் சிதறி இருந்த யூதர்கள் கூட தங்களுடைய நாடு திருப்பி கிடைத்த போது தங்களின் மொழியான “ஹிப்ரு” மொழியை ஏற்றுக்கொண்டனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாடு இல்லாத யூதர்களின் மொழி கூட எங்கும் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் நடைமுறையில் இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.