1. அன்னி பெசண்ட் அம்மையார் அக்டோபர் 01, 1847 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
2. “லிங்க்” என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார்.
3. பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
4. சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாஸ்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார்.
5. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி கற்றார்.
6. இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழ்ந்தார்.
7. ஹிந்துமதம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிர்காலமே இல்லை. ஹிந்துத்துவத்தை விட்டுவிட்டால் , நீங்கள் இந்திய அன்னையின் முதுகில் குத்துகிறீர்கள் என்று அர்த்தம் . இந்த ஒப்புயர்வற்ற மதம் இருப்பது மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர்த்துகிறது என்றவர்.