வரலாற்று ரீதியாக, அகமதாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் 11ம் நூற்றாண்டிலிருந்து அஷாவல் என்று அழைக்கப்பட்டதிலிருந்து அங்கு மக்கள் வசிக்கின்றனர். அன்ஹில்வாராவின் சாளுக்கிய ஆட்சியாளரான கர்ணன், ஆஷாவலின் பில் மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போரை நடத்தி, சபர்மதி ஆற்றின் கரையில் கர்ணாவதி என்ற நகரத்தை நிறுவினார். ஆனால் பிற்காலத்தில் முகலாய ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் சுல்தான் அகமது ஷா என்பவரால் கி.பி 1411ல் அகமதாபாத் என்று அது மறுமாற்றப்பட்டது. எனவே, அகமதாபாத்தின் பெயரை மீண்டும் “கர்ணாவதி” என்று மாற்றுவதற்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கான முன்மொழிவு, பிப்ரவரி 8 அன்று தேசிய மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியாய் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட அளவிலான மாணவர்களின் மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டது. “சத்ரா சம்மேளனத்தில்” இந்த திட்டம் 5,000 மாணவர்களால் நிறைவேற்றப்பட்டது. வருவாய்துறை, ஆட்சியர், கல்லூரி முதல்வர்கள் மற்றும் எங்கெல்லாம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கெல்லாம் நாம் இதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று ஏ.பி.வி.பியின் குஜராத் செயலாளர் யுடி கஜ்ரே செய்தியாளர்களிடம் கூறினார். பா.ஜ.க அரசு அமைந்தல் அகமதாபாத்தின் பெயரை கர்ணாவதி என்று மாற்ற தயாராக இருப்பதாக அப்போதைய குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறிய சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது. முன்னதாக, பிப்ரவரி 4, 1960 இல், குஜராத் மாநிலம் பம்பாய் பிரசிடென்சியில் இருந்து குஜராத் பிரிக்கப்படுவதற்கு முன்பு அகமதாபாத்தின் பெயரை கர்ணாவதி என்று மறுபெயரிட வேண்டும் என்று வீர சாவர்க்கர் பரிந்துரைத்தார். தேஷ் குஜராத் என்ற பெயரில் குஜராத்தை சேர்ந்த இணையதளம் ஒன்று, வீர சாவர்க்கரின் இந்த கோரிக்கை தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது.