உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஹரிநகர் பகுதியில் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹோலி கொண்டாட்டங்களுக்காக இரு ஹிந்து நபர்கள் நன்கொடை வசூலித்தனர். அப்போது, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர் ஹிந்துக்களை தரக்குறைவாகப் பேசியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது, மோதல் மற்றும் கல் வீச்சு சம்பவமாக மாறியது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் ஆறு பேர் வரை காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். சில சிசிடிவி பதிவுகள், சேதமான வாகனங்கள், உடைந்த ஜன்னல் கண்ணாடிகள், பீதியடைந்த உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் இருந்து அங்கும் இங்கும் ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதை காட்டுகின்றன. காயமடைந்தவர்களில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பல முஸ்லிம் ஆண்கள் தங்களைத் தாக்கியதாகவும், அவர்களின் ஹோலி கொண்டாட்டங்களை அழிக்க அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.