பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. நாடு முழுதும் புதிதாக 157 நர்சிங் கல்லுாரிகளை திறக்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இதற்காக, 1,570 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.இந்த புதிய நர்சிங் கல்லுாரி வாயிலாக 15 ஆயிரத்து 700 நர்ஸ்கள் ஆண்டு தோறும் பட்டம் பெறுவர். கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லுாரி வளாகத்திலேயே இந்த புதிய நர்சிங் கல்லுாரிகள் அமைய உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 11 நர்சிங் கல்லுாரிகள் அமைய உள்ளன. அவை திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வர உள்ளன