குஜராத்தில், பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளிகளில் இந்து மாணவர்களுக்கு நமாஸ் கற்பித்த விவகாரம் வெளியாகி உள்ளது. இதில் ஒன்று கட்ச். இரண்டாவது மெஹ்சானாவைச் சேர்ந்த பள்ளிகள். இந்த இரு பள்ளிகளிலும் ஆக்டிவிட்டி என்ற பெயரில் நமாஸ் கற்று கொடுக்கப்பட்டது. பள்ளியின் செயலால் குழந்தைகளின் பெற்றோர்கள் கோபமடைந்துள்ளனர். இரு பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.