பயங்கரவாதம், நக்சலைட்டுகள் மற்றும் கிளர்ச்சி சம்பவங்கள் 65 சதவீதம் குறைந்துள்ளது என மறைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சியில் பேசுகையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபடுகின்றனர். போலீசாரின் உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக். 21-ல் தேசிய போலீஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் உயிர் தியாகம் செய்த போலீசாரின் நினைவாக டில்லியில் புதுப்பிக்கப்பட்ட தேசிய போலீஸ் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும், போலீஸ் படை இல்லாமல் எல்லைப் பாதுகாப்பிற்கு சாத்தியமில்லை. பண்டிகையிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எப்போதும் பணியில் இருப்பார். அது பயங்கரவாதமோ, குற்றமோ, சாமானியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் உழைத்து வருகின்றனர். அனைத்து அரசுப் பணிகளிலும் போலீசார் பணி மிகவும் கடினமானது. பயங்கரவாதம், நக்சலைட்டுகள் மற்றும் கிளர்ச்சி சம்பவங்களில் 65 சதவீதம் குறைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகின்றன.நவீனமயமாக்கலுக்காக “போலீஸ் டெக்னாலஜி மிஷன்” அமைப்பதன் மூலம் உலகின் சிறந்த பயங்கரவாத எதிர்ப்புப் படையை உருவாக்குவதற்கு அரசாங்கம் கடினமான பணி மேற்கொண்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Home Breaking News பயங்கரவாதம், நக்சலைட்டுகள் கிளர்ச்சி சம்பவங்கள் குறைந்துள்ளது போலீசாருக்கு அமித்ஷா பாராட்டு