காபூல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்று விடும் – அமெரிக்கா கணிப்பு.

2
278

ஆப்கானிஸ்தானின் 90 நாட்களில் தலைநகர் காபூல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அமெரிக்கா கணித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு தற்போது மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறுகிய காலத்தில் 10 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குந்தூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா, கஸ்னி உள்ளிட்ட 10 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இந்நிலையில் வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி விடுவார்கள். அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2 COMMENTS

  1. Hello there! This blog post couldn’t be written much better!
    Going through this article reminds me of my previous roommate!
    He continually kept preaching about this. I am going to send this information to him.
    Pretty sure he’ll have a very good read. Thank you
    for sharing!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here