திருப்பத்தூர் மாவட்டம், கதவாளம் பகுதியை சேர்ந்த 80 வயதான நந்தன் என்ற முதியவருக்கு அப்பகுதியில் 3 சென்ட் அளவிலான இடம் உள்ளது. அந்த இடத்தை ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதன், அந்த இடத்தை தரவேண்டும் என, 10 அடியாட்களை வைத்து மிரட்டி வந்துள்ளார். அவருக்கு வேறு இடத்தில் இடம் தருவதாக கூறி நிலத்தை அபகரித்து ஏமாற்றியும் உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனம் உடைந்த முதியவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தார். இதனைக் கண்ட பொதுமக்களும் காவலர்களும் தீயை அனைத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், தி.மு.க எம்.எல்.ஏவின் அடியாட்களான பாலாஜி, சிவா, செந்தில் சாமிநாதன் உள்ளிட்ட பலரின் பெயர்களைத் தெரிவித்துள்ளார் நந்தன்.
Source by; Vijayabharatham Weekly