சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிய ஒரு குழந்தை உட்பட மூன்று சர்வதேச விமானப் பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. அவர்கள் புதிய வகை ஓமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பது பரிசோதனை செய்த பிறகே தெரிய வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் புதிய வகை ஓமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சமூக ஊடகங்கள் வரும் செய்திகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது, அது சோதனைகள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து அதிகாலையில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஒருவருக்கும், இங்கிலாந்தில் இருந்து குடும்பத்துடன் இங்கு வந்த ஒரு குழந்தைக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இருவரும் புதிய வகை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் வரும் தகவல்களை மறுத்துள்ள அவர் பரிசோதனைக்கு பின்பே அது தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.