வணக்கம்
பாரத சுதந்திர போராட்ட வரலாற்றில் போராட்ட தியாகிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் மட்டுமே. ஆனால் எந்த ஒரு முகாந்திர உதவியும் இல்லாமல் கிறிஸ்துவ ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தான் வீர சாவர்க்கர். அதாவது ஒரு வேலையை செய்பவர் அதற்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க வேண்டுமென ஆசைப்படுவார். ஆனால் அதற்கெல்லாம் ஆசை பாடாமல் ஒரு சிலர் தியாகத்தின் உருவமாக நாட்டுக்காக தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிரைவிட துணிந்தவர்கள் சொற்பமே. இன்னும் விரிவாக சொல்லப் போனால் சுதந்திரப் போராட்டத்திற்காக உயிரைக் கொடுத்து போராடுவதை விட அந்த உயிரை வைத்து எப்படியெல்லாம் போராடலாம் என யோசிக்க தூண்டியவர் தான் வீர சவார்க்கர். அவரைப் பற்றியே இந்த காணொளி.
Video வடிவில்
1883 ஆம் ஆண்டு மே 28ஆம் நாள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகில் பாவூர் என்ற கிராமத்தில் தாமோதரப் பந்த சவார்க்கர் மற்றும் ராதாபாய் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் சாவர்க்கர். அவ அவரின் முழுமையான பெயர் விநாயக் தாமோதர சவார்க்கர். இளம் வயதிலேயே தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து ஏன் அடைகிறது என கேள்வி கேட்க ஆரம்பித்து, தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை எதிர்க்கவும் செய்தார். 11ம் வயதில் விளையாடும் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து வானர சேனையை உருவாக்கி அதனை பற்றி மற்றவர்களையும் சிந்திக்க வைத்தார். பள்ளிப்பருவ வயதிலேயே பாலகங்காதர திலகர் நடத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னின்று திறம்பட நடத்தினார்.
தனது 9 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்து தனித்து இருந்தாலும் துணிந்து கிறிஸ்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்து கவிதை எழுதினார். அந்நியர்களின் ஆட்சியை எதிர்தற்காக 1898 மகாராஷ்டிராவில் சபேகர் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர் . இதனால் மனம் வெதும்பி சாவர்க்கர் 15வது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்துக் கொண்டார்.
1901ஆம் ஆண்டு யமுனாபாய் என்ற பெண்ணை மணந்தார் சாவர்க்கர். புனேயில் உள்ள பெர்கசன் கல்லூரியில் 1902ம் ஆண்டு சேர்ந்தார். கல்லூரி காலத்திலேயே அபிநவ பாரத் என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரத்திற்கான வேலையில் இறங்கி வேலை செய்தார். பின்னர் பால கங்காதர திலகரின் சுயராஜ்யக் கட்சியில் இணைந்தார். திலகரை அரசியல் குருவாக ஏற்று, வீரமிக்க செறிவுற்ற இவருடைய பேச்சை கேட்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றியது ஆங்கிலக் கல்லூரி நிர்வாகம். ஆனாலும் அதை மீறி தேர்வு எழுதி பட்டம் பெற்றார்.
1906 ஆம் ஆண்டு பாரிஸ்டர் படிப்புக்கு இலண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களை ஒன்றிணைத்து குழுவாக்கி சுதந்திரத்திற்கான வேலைகளில் அங்கேயும் இறங்கினார். அந்த குழுவில் பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஹவுஸில் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் சாவர்க்கர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கண்டுபிடிக்க முயற்சித்த பிரெஞ்சு அரசு விழி பிதுங்கியது.
அவர் அளித்த பயிற்சிகள் மூலம் 1909 ஆம் ஆண்டு சாவர்க்கரின் சீடரான மதன்லால் திங்கரா சர்.கர்சன் வில்லியை இலண்டனில் சுட்டு கொன்றார். பின்னர் நாசிக் கலெக்டர் சாக்சனை ஆனந்த லட்சுமணன் கண்ணாரே என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார்.
இதற்கெல்லாம் காரணம் லண்டனில் உள்ள இந்தியா ஹவுசில் நடக்கும் பயிற்சிகள் என முடிவு செய்து, அதனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கிறிஸ்துவ ஆங்கிலேயர்களின் ஆட்சி. இதனால் 1910ம் ஆண்டு மார்ச்சு 13 இல் கைது செய்யப்பட்டார் சாவர்க்கர். லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும் போது கப்பல் கழிவறையில் உள்ள ஜன்னல் மூலம் கடலில் குதித்து தப்பித்தார் சவார்க்கர். கரை ஒதுங்கிய பின்னர் பிரெஞ்சு காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டார். பிரெஞ்சு காவலர்கள் பிடித்ததால் அந்த வழக்கு பிரெஞ்சு நாட்டு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் மக்களை போராட்டத்திற்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு ஆயுதங்களை கடத்தி ஆயுத பயிற்சி நடத்தியதால் 50 ஆண்டுகாலம் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் தொடர்ந்து ஆறு மாத காலங்கள் இருட்டு அறையில் தனி சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாதங்கள் யாரும் பார்க்க முடியாதபடி சிறையில் இருந்தார். கை கால்கள் கட்டப்பட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் நிற்க வைக்கப்பட்டார். இதுபோல் இரண்டு முறை சிறையில் இருக்கும் போதே நடந்தேறியது. கிராஸ் பார் என்று சொல்லும் பலகையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அதாவது சிலுவையில் அறைந்தது போல் தொடர்ந்து 10 நாட்கள் நிறுத்தப்பட்டார். மேலும் செக்கு இழுத்தது. கயிறு திரித்தது என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்தக் கொடுமைகள் எல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய வீரர்கள் யாருமே அனுபவித்திருக்க மாட்டார்கள்.
பின்னர் சாவர்க்கரால் நடக்க வேண்டிய சில காரியங்கள் தடைபட்டு இருக்க, வெளியே இருந்தால் அவை எல்லாம் சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் என அறிந்து கொண்ட சாவர்க்கர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்காக சில நாடகங்களை நடத்தி மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்து சில நிபந்தனைகளுடன் விடுதலையானார். வெளியே வந்தவுடன் ஒரு சில காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் சுதந்திரம் அடைந்தது பாரதம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் எங்களால் தான் சுதந்திரம் கிடைத்தது என சுய தம்பட்டம் அடித்துக் கொண்டது காங்கிரஸ். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சாவர்க்கர் மனம் வெதும்பி 1961ஆம் ஆண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதிலுள்ள ஒரு சில கருத்துக்களை தினமணி நாளிதழ் 2017 ஆம் ஆண்டு மே 29 வெளியிட்டுள்ளது. அதனை பாப்போம்.
காங்கிரஸ் தான் ஆங்கிலேயப் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகங்களில் பாடங்களை வடிவமைத்துள்ளது. ஆனால் உண்மையில் நம்முடைய புரட்சியாளர்களின் தூண்டுதலால் பலம் வாய்ந்த நம் சேனை, வாளை உருவி வீரத்துடன் போராடியது. ஆங்கிலேயர்களை வெட்டி குவித்தது மற்றவர்களை போராடத் தூண்டியது. இதனால் தான் ஆங்கிலேயர்கள் பயந்து போய் சுதந்திரம் கொடுக்க பேச்சுவார்த்தை துவங்கினர். இந்த சரித்திரப் புகழ்வாய்ந்த உண்மையை பிரிட்டிஷ் பிரதம மந்திரியே பார்லிமென்டில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்லிமென்டில் பிரிட்டிஷ் அரசு இண்டிபெண்டன்ஸ் ஆஃப் இந்தியா ஆக்ட் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட உடன், சர் வின்ஸ்டன் சர்ச்சில் வருத்தமடைந்து. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை தவிர வேறு வழி இல்லையா? இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காமல் நம் பிடியிலே வைத்துக் கொள்ள முடியாதா? என்று கேட்டார்.
அவருக்கு பதில் அளித்த பிரதமர் கிளமெண்ட் அட்லி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கான காரணம் அங்கு உள்ள ராணுவம். அது தற்போது வெறும் ரொட்டிக்காக ஏங்கிக்கொண்டு இல்லை. மேலும் பிரிட்டனுக்கு தற்போது நிலையில் இந்திய ராணுவத்தை அடக்கி வைக்கும் சக்தியும் இல்லை என்று பதில் அளித்து அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகினார் அட்லி.
இதனையெல்லாம் சுட்டிக்காட்டி சுதந்திரம் என்பது புரட்சியாளர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. என்று தனது கட்டுரையில் தெரிவித்தார். மேலும் சுதந்திரமடைந்த பின்னர் காங்கிரஸ் காரர்கள் தனக்கு பட்டம், பதவி வேண்டும் என ஓடிப்போய் முன் வரிசையில் நின்றனர். அவகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் வீர சவார்க்கர் கூறியது. ஒரு காலகட்டத்தில் புரட்சிக் கருத்துக்களை கூறுவது பைத்தியக்காரத்தனம் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சமயத்தில் புரட்சியாளர்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வைத்து எண்ணற்ற இளைஞர்களை உருவாக்கினார். அவர்களுக்கு எந்த பொருளின் மீது நாட்டம் இல்லை. அவர்கள் தான் உண்மையான சிறந்த போராட்ட வீரர்கள் என்று மார்தட்டி கூறி. தனக்கு எந்த ஒரு பட்டமும் பதவியும் வேண்டாம் என வெளிப்படையாக அறிவித்தார். இதனாலேயே இவர் மேல் பற்று கொண்டவர்கள் இவரை வீர சவார்க்கர் என அழைத்தனர்.
வீர சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல சமூக சீர்திருத்தவாதியும் கூட. ஒட்டுமொத்த மக்கள் உட்பட எல்லா ஹிந்துக்களும் வணங்க பதித பவன் என்ற கோவிலை ரத்தினகிரியில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் கட்டி அனைத்து தரப்பு மக்களையும் வழிபடச் செய்தார். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 இறைவன் திருவடியை சேர்ந்தார் வீர சாவர்க்கார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் அந்தமான் என்ற ஊர் இருக்கும் வரை அதன் சிறையையும் சாவர்க்கரையும் யாரும் மறக்க மாட்டார்கள். அதனால் ஜவர்கலால் நேரு பிரதமராக இருக்கும் போது அந்த சிறையை இடிக்க வேண்டும் என்றார். அதனை பல எதிர்ப்புகள் வந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார். பின்னர் மத்திய அமைச்சராக இருந்த சவான் அந்தமான் சென்ற போது அந்த சிறைக்கு செல்ல மறுத்துவிட்டார். பல வருடங்களுக்கு பிறகு இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அந்தமானுக்கு சென்றபோது அந்த சிறைக்கு செல்ல அவரும் மறுத்து விட்டார். இதை எல்லாம் மிஞ்சும் அளவில் 2004ஆம் ஆண்டு பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் அந்தமானில் சுதந்திர ஜோதிடத்தில் அவருடைய பொன்மொழி எழுதப்பட்டிருந்தது. அதை அந்த இடத்திலிருந்து அகற்ற உத்தரவிட்டார்.
வீர சவார்க்கர் என்ற போராளியின் மீது காங்கிரஸ் கக்கிய வன்மங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தலைமுறையைக் கடந்தும் அந்த வன்மங்கள் தொடர்கின்றன. அதன் நீட்சியே தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடியின் தலைமை கொண்ட பாஜக அரசு வீர சாவர்க்கர்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி தாறுமாறாக பொங்கி எழுந்து பல எதிர்மறையான கருத்துக்களை கக்கியது. வீர சாவர்க்கரின் சுதந்திர வேட்கை, தியாகம், தேசபக்தி ஆகியவற்றை எந்த ஒரு போராளிகளுடனும் ஒப்பிட முடியாது அவருக்கு விருது அளிக்கப்படாமல் இருப்பது பாரதமாதாவுக்கு அளிக்கப்படும் அவமரியாதை எனக்கூறி முடிக்கின்றோம்.
நன்றி வணக்கம்.
[…] வீர சாவர்க்கரின் வரலாறு […]
Exceptional post but I was wondering if you could write
a litte more on this subject? I’d be very grateful if you
could elaborate a little bit further. Cheers!