இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாமல் இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டாவில் சீனா அமைத்த துறைமுகம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப்பெருங்கடல் பகுதியில் நடக்கும் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அம்பன்தோட்டா என்பதால் பெட்ரோலியப் பொருள்கள் வர்த்தகத்தில் 50 சதவீதம் இந்த துறைமுகம் வழியாகவே செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த துறைமுகத்தை பல்நோக்கு துறைமுகமாக மாற்றுவதற்கு சீனா முன்வந்தது. இதற்காக 8350 கோடி ரூபாய் செலவில் அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை கொடுத்து உள்ளது. நேரடியாக பாரத நாட்டை நேரடியாக எதிர்க்க முடியததால் மறைமுகமாக எதிர்க்க திட்டம் தீட்டி இலங்கைக்கு உதவது போல வந்து இந்தியாவை வர்த்தக ரீதியாக முடக்க இருக்கிறது. மேலும் அதன் மூலம் பாதுகாப்பு ரீதியில் பிரச்னை ஏற்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் ‘அடுத்த ஆண்டில் இந்த துறைமுகம் பயன்பாட்டுக்கு வரும்’ என சீனா இலங்கை கூட்டு நிறுவனம் அறிவித்து உள்ளது.