இலவச சிறப்பு பயிற்சி

0
341

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இது தனது 27வது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்பு பயிற்சித் திட்டத்தை 2021 டிசம்பர் 1முதல் 11 மாதங்களுக்கு நடத்த உள்ளது. பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் தங்களது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு, பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச  கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும். +2 தேர்ச்சி, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 27 வயதுடையவர்கள் 2021 நவம்பர் 30 வரை தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here