பழங்குடியின சமூகமான குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை வரவேற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற இடங்களை மறுவரையறை செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையம், ஜம்மு பிராந்தியத்திற்கு ஆறு கூடுதல் இடங்களையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு இடத்தையும் முன்மொழிந்துள்ளது. சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு (எஸ்டி) ஒன்பது இடங்களை ஒதுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுளது. இதற்கு பழங்குடி ஆராய்ச்சியாளர் மற்றும் பழங்குடி ஆராய்ச்சி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் நிறுவனர் செயலாளரான ஜாவைத் ராஹி வரவேற்றுள்ளார்.
30 வருட காத்திருப்புக்குப் பிறகு நடந்த இத்தகைய நடவடிக்கையை குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் மனதார வரவேற்கிறார்கள், என்றார்.
குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு பெரிய பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் இன ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான பிரிவாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை பழங்குடியின சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பதோடு, வறுமை, சாதி இழிவு மற்றும் சமத்துவமின்மையை ஒழிக்க உதவும், என்றும் அவர் கூறினார்.