ஜனவரி 4ம் தேதி அன்று ஒடிசா அரசாங்கம் மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் அமைப்புக்கு ருபாய் 78,77,000/- வழங்கியுள்ளது. இது அறிவாளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விஹெச்பி எதிர்க்கிறது என விஸ்வ ஹிந்து பரிஷதின் அகில இந்திய பொது செயலாளர் மிலிந்த் பரந்தே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் அமைப்பு ஹிந்துத்துவத்திற்கு எதிராக சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஓடிசாவில் உள்ள 3% கிறிஸ்துவர்களை திருப்தி படுத்த மாநில அரசு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் இயற்கை பேரிடர் முதலானவற்றிற்காகவும் பயன்படுத்தவேண்டிய முதல்வர் நிவாரண நிதியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவது மரபல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் விஎச்பி க்ஷேத்திர சங்கதன் பிரமுக் சபன் முகர்ஜி, மாநில தலைவர் பேராசிரியர் பிரபுல்லா மிஸ்ரா, பிராந்த சங்கதன் பிரமுக் ஆனந்த் குமார் பாண்டே, மாநில செயலாளர் பண்டிட் மகேஷ் குமார் சாஹூ, மாநில இணை செயலாளர் உமாசங்கர் ஆச்சார்யா மற்றும் ஒடிசா மாநில விஎச்பி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.