அயோத்தியில் ஆதி சங்கரருக்கு கோவில்

0
200

அயோத்தியில் ராமர் கோவில் அருகே சரயு நதிக்கரையில் ஆதிசங்கரருக்கு கோவிலும், அவரது அத்வைத கொள்கையை பலரும் அறியும் வகையில், 15 ஏக்கரில் அகில உலக ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது.
அயோத்தியில் ஆதிசங்கரருக்கு கோவில் அமைய வேண்டும் என்ற கர்நாடகா சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு பாரதி தீர்த்தரின் விருப்பத்தை சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளை மடமான யடத்துார் மடத்தின் ஸ்ரீ சங்கர பாரதி சுவாமிகள், ஜன., 29ல் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

அதன் பலனாக, அயோத்தியில் ராமர்கோவில் அருகில் சரயு நதிக்கரையில், 15 ஏக்கரில் ஆதிசங்கரர் கோவிலும், ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது. மையத்தின் தலைமை புரவலராக, சிருங்கேரி சாரதா பீடாதிபதி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here