உ.பி.,யில் நாளை(பிப்.,10) முதல் கட்டதேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக ஷாம்லி, மதுரா, ஆக்ரா, முசாபர்நகர், பக்பத், மீரட், காசியாபாத், கவுதம புத்த நகர், ஹபுர், புலந்த்ஷர், அலிகார்க் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுக்கள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நடக்கும் பகுதிகளில் துணை ராணுவ படையின் 412 கம்பெனியை சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முசாபர்நகர், அலிகார்க், மீரட் மாவட்டங்களில் அதிக கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மதுராவில் மட்டும் 75 கம்பெனி வீரர்கள்(21 ஆயிரம் பேர்) ஈடுபடுகின்றனர்.