கர்நாடக ஹிஜாப் சர்ச்சை மீதான பாகிஸ்தானின் கூற்று ‘அடிப்படையற்றது’ என்று இந்திய தூதர் கூறியுள்ளார். மேலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறியுள்ளார்.
கர்நாடக ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்திய தூதர் சுரேஷ் குமார் மறுத்துள்ளார். இந்திய தூதர் பாகிஸ்தானின் கூற்றுகளை “அடிப்படையற்றது” என்றும் “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை குற்றம் கூறும் முன்பு பாகிஸ்தான் தங்கள் நாட்டில் நடந்த மற்றும் நடப்பவைகளை பார்க்க வேண்டும்,” என்றும் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
முன்னதாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணியும் உரிமை இந்தியாவில் தடுக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியிருந்தது.