அமைதிப் புரட்சியின் தொடக்கமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சமத்துவத்தின் சிலையாக 216 அடி உயர ராமானுஜர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சமுதாய சமத்துவம் என்ற பூரணத்தை நோக்கி தேசத்தின் பயணம் ஆரம்பித்துவிட்டது. பாரதத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களால் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டு, மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டும் இருந்த வேளையில் ஜாதி, இன, ரீதியாக பிரிந்து இருந்த மக்களை பக்தியின் மூலம் ஒருங்கிணைக்க ஆங்காங்கே தோன்றிய மகான்களில் ஸ்ரீ ராமானுஜரும் ஒருவர். எந்த ஜாதி இனம், மொழி சேர்ந்தவராக இருந்தாலும் இறைவன் முன் அனைவரும் சமமே என்ற கொள்கையை பல எதிர்ப்புகளுக்கு இடையிலும் உறுதியாக நிலைநாட்டி வந்தார். உடலுக்குத்தான் ஆண் பெண் வேறுபாடு ஆன்மாவிற்கு இல்லை என்று கூறி பெண்களுக்கும் முன்னுரிமை அளித்த முதல் சமூக சீர்திருத்தவாதி ராமானுஜர் .ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை நிரூபிக்க பட்டியலினத்தைச் சேர்ந்த அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் ஸ்ரீராமானுஜர். இப்படிப்பட்ட மகான்களை தெய்வத்துக்கு இணையாக வைத்து துதிபாடி வழிபடுவதோடு நின்று விட்டனர் நமது முன்னோர்கள் .சங்கம் அவர்களது வழிகாட்டு நெறிமுறைகளை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி ஜாதி வேற்றுமையை அகற்றி அனைவரும் சமம் என்பதனை கீழ்க்கண்ட முறைகளில் அமல்படுத்தி வருகிறது.
1 தினமும் ஒரு மணி நேரம் சந்திப்பில்(ஷாகா) அனைத்து மக்களும் கலந்து கொள்வது போலவே நிகழ்ச்சிகள் அமைந்து வருகின்றன ஒருவரை ஒருவர் என்ன ஜாதி என்று கேட்பதில்லை .இதனை மகாத்மா காந்தி அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் நேரில் கண்டுள்ளனர்.
2 சங்கத்தின் சர் சங்கச்சாலக் குருஜி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சங்கராச்சாரியார்கள் மடாதிபதிகளை ஒருங்கிணைத்து அவர்கள் மூலமாகவே இந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை கூற வைத்தார்.
3 பாலாஷாகிப் தேஷ்பாண்டே என்பவர் மூலம் மலைவாழ் மக்களிடையே வேலை செய்து இந்து என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களை அனுப்பி வைத்தார். அது பின்னாளில் 1977இல் வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆனது.
4 ஆர்எஸ்எஸ் விஎச்பி இணைந்து அனைத்து சன்யாசி களையும் ஒருங்கிணைத்து இந்து அனைவரும் சகோதரர்கள், இந்து எவருமே தாழ்ந்தவராகார் இந்துவை காப்பது என் உரிமை சரிச மானமே எனது மந்திரம். என்று முழங்க வைத்தார்.
5 1981 இல் மதுரை மீனாட்சிபுரத்தில் நடக்கவிருந்த பெரும் மத மாற்றத்தைத் தடுத்து இந்து ஒற்றுமைக்கு ஒரு திருப்புமுனையாக வேலை செய்தவர் HV சேஷாத்திரி அன்றைய அகில பாரத செயலாளர்.
6 ஸ்ரி தேவரஸ் ஜி அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் கலப்புத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். இந்தியாவிலேயே அதிகமான கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்.
7 அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் அடிக்கல் நாட்டியது காமேஸ்வரர்சாப்பல் என்ற தலித் சமுதாயத்தினர்.
8 ஒவ்வொரு இந்துவும் பட்டியலின சமுதாயத்தோடு குடும்ப ரீதியில் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என சங்கம் கூறியுள்ளது.
9 பட்டியலின சமுதாயத்தை உள்ளடக்கிய இருபத்தி ஒன்பது பிராமணர் அல்லாதவர்களுக்கு அர்ச்சகராக பயிற்சி கொடுத்து சான்றிதழ் கொடுக்கப்பட்டு அர்ச்சகராக பணி செய்து வருகிறாரகள் இதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாதவன் என்ற பிரசாரக்.
10 பாஜகவில் மட்டும்தான் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக எம்பி களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
11 சமாஜிக் சமரசதா என்ற அமைப்பை ஏற்படுத்தி அதிகமான சமுதாய சமத்துவத்தை நிலைநாட்ட சங்கம் வேலை செய்து வருகிறது.
12 15 -3 -2015 ல் நடந்த அகில பாரதிய பிரதிநிதி சபாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் ஒரு கிணறு ஒரு சுடுகாடு பொதுவாக இருக்க வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளது.
சந்திரசேகர் ஜி