நாட்டில், பணிச்சூழல் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயரும் தொழிலாளர்கள், நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளில் இருந்தும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ .
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் வைத்து, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.கீழ், ரேஷன் கார்டை யாரும் ரேஷன் கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை; ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை தெரிவித்தால் போதுமானது.இந்த திட்டம் தற்போது, 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தில், 77 கோடி பயனாளிகள் உள்ளனர்.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், ‘பிரதமரின்கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்ட பயனாளிகளுக்கு, தலா 5 கிலோ தானியங்கள், 19 மாதங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.பிரதமரின் இந்த முயற்சியால், கொரோனா பரவல் காலத்தில், நாட்டில் ஒருவர் கூட பசி பட்டினியால் அவதிப்படவில்லை.