இந்தியா உதவி : இலங்கைக்கு 37,500 டன் பெட்ரோல்

0
392

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடனுதவித் திட்டத்தின் கீழ் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடையவிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் தெரிவித்துள்ளது. அடுத்த 25 நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கைக்கு நேற்று வரப்பெற்ற 41,000 டன் டீசல் எரிபொருள் கிடங்குகளில் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இலங்கையில் புத்தாண்டு விழா கொண்டாட வசதியாக, இந்தியா அனுப்பிவைத்த 11,000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி, தலைநகா் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை வந்துசோ்ந்தது. இலங்கையில் சிங்கள புத்தாண்டு புதன்கிழமையும், தமிழ் புத்தாண்டு வியாழக்கிழமையும் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட அரிசி கொழும்பு வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here