குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும்.அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை ஒவ்வொரு மாவட்டமும் நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. 2022ன் முதல் காலாண்டில் இந்திய ‘ஸ்டார்ட் அப்’ 14 யுனிகார்ன்களை அமைத்துள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.