கண்ணன் பிறந்தது அஷ்டமியில். அவனுடைய அண்ணன் பலராமன் பிறந்து இரண்டு நாள் முன்னதாக சஷ்டியில். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 19 அன்று வருகிறது. ஆகஸ்ட் 17 அன்று அதாவது இன்று பலராம ஜெயந்தி. ஹிந்துஸ்தானத்தின் பல பகுதிகளில் ஹல் ஷட் என்ற பெயரில் பலராம ஜெயந்தியை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஹல் என்றால் கலப்பை. இது பலராமனின் ஆயுதம். ஷட் என்றால் சஷ்டி. பலராமனை போல உடல் வலிமையுடன் மகவு வேண்டும் என்று குடும்பங்கள் ’ஷட் மாதா’விடம் வேண்டுதல் வைத்து இந்த சஷ்டியை கொண்டாடுவது மரபு.